முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து அமைச்சர் நம்பிக்கை

மியன்மாரில் (Myanmar) இணைய குற்றச் செயல்கள் இடம்பெறும் பகுதியில் பல நாடுகளைச் சேர்ந்த 100,000 இற்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது மியன்மார் விஜயத்தின் போது இந்த விடயம் தெரிய வந்ததாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய (Tharaka Balasuriya)  தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டுக்கான விஜயத்தை நிறைவு செய்து நேற்றைய தினம் இலங்கைக்கு (Sri Lanka) மீள திரும்பியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

49 இலங்கையர்கள் தடுத்து வைப்பு 

இதன்படி மியன்மாரில் இணைய குற்றச் செயல்கள் இடம்பெறும் பகுதியில் 49 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து அமைச்சர் நம்பிக்கை | 49 Sri Lankans Detained In Myanmar Tharaka

அவர்களை விரைவில் மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தாரக பாலசூரிய சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலில் (Russo-Ukrainian War) பங்கேற்பதற்காக ரஷ்யாவிற்குச்  சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ உத்தியோகத்தர்களை மீளவும் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அலிசப்ரி தெரிவிப்பு 

குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து அமைச்சர் நம்பிக்கை | 49 Sri Lankans Detained In Myanmar Tharaka

இதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழுவினர் ரஷ்யாவிற்குச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்