ஹிஸ்புல்லா (Hezbollah) தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் மறைவையடுத்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி துக்க காலத்தை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை (Hassan Nasrallah) குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் நேற்று (28) அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்தையொட்டி ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா ஈரானில் (Iran) 5 நாட்கள் துக்க காலத்தை அறிவித்துள்ளார்.
வரலாற்று திருப்புமுனை
மேலும், ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்திற்கு பழிவாங்காமல் நீதி கிடைக்காது என்று ஈரானின் உச்ச தலைவர் கூறியுள்ளார்.
எனினும் ஹிஸ்புல்லா தலைவரின் மரணம் வரலாற்று திருப்புமுனையாக அமையும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu )தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் பலருக்கு நீதியை பெற்றுத்தரும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
விமான தாக்குதல்
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா இஸ்ரேல்(israel) விமான தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து ஈரானின்(iran) ஆன்மிக தலைவர் இரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் பெயர் குறிப்பிடப்படாத அதிக பாதுகாப்புள்ள இடத்துக்கு காமேனி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ஹிஸ்புல்லாவுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து வருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்தோடு தங்களின் தாக்குதலை முடித்துக் கொள்ளப்போவதில்லை என்று இஸ்ரேல் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாவுக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்காமல் தாங்கள் பின்வாங்கப்போவதில்லை என்று அவர் சூளுரைத்துள்ளார்.