பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 5 பேர் படகு விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் பிரித்தானிய நேரப்படி இன்று (23) காலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன்: விஜயதாஸ ராஜபக்ச உறுதி
சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் குழு
பிரான்சில் இருந்து 110 பேர் அடங்கிய சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று சிறிய படகொன்றில் பிரித்தானியாவுக்கு சென்றதாக பிரான்ஸ் நாட்டின் கடற்படையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது, இந்த படகு விபத்துக்குள்ளானதில் மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.
2026 இல் அதிகரிக்கும் இலங்கையின் வறுமை விகிதம்: உலக வங்கி சுட்டிக்காட்டு
ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டம்
அதேவேளை, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டம் இன்று சட்டமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, நாட்டிற்குள் நுழைந்த சட்டவிரோத குடியேரிகள் அடுத்த வாரம் முதல் ருவாண்டாவிற்கு நாடுகடத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் மாபெரும் தொழிற்சந்தை: உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |