உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை(Cardinal Malcolm Ranjit) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 21ம் திகதியுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகவுள்ளது.
போராட்டத்தால் தடுக்கப்பட்ட வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும் செயற்பாடு
மல்கம் ரஞ்சித் ஆண்டகை
குறித்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21.04.2024) காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக எதிர்வரும் 21ம் திகதி இலங்கையின் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத கடற்றொழிலை ஊக்குவிக்கும் இலங்கை அரசு: ரவிகரன் ஆதங்கம்
போர் பதற்றத்திலும் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி – குவிக்கப்படும் இராணுவத்தினர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |