தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரைத் தொடர்ந்து தமிழ் மக்களது பூர்வீக நிலங்கள் உட்பட தமிழர் தாயகத்தில் உள்ள வளங்கள் திட்டமிட்ட முறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சூறையாடப்பட்டுவருகிறன.
இந்நிலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கு – கிழக்கில் உள்ள காணிகள் தொடர்பில் வெளியிட்ட அரச வர்த்தமானி அறிவித்தலின் எதிரொலி தமிழ் மக்கள் இடையே மேலோங்கியுள்ளது.
வடக்கு கிழக்கு மக்கள் யுத்தகாலத்தில் பலதடவைகள் இடம்பெயர்வுகள் காரணமாகவும் போர் அழிவுகள் காரணமாகவும் பெருமளவு மக்களின் சொந்தமான காணி ஆவணங்கள் சொத்துக்கள் இழக்க வேண்டி ஏற்பட்டது.
இந்நிலையில் அரசு இந்த வர்த்தமானியை வெளியிட்டதன் நோக்கம் மக்களின் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவா? . மாறாக மக்களின் ஆவணங்களற்ற காணிகளை அரச காணிகளாக சுவீகரிப்பதே இவர்களது நோக்கமா? என கேள்வியெழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் மக்களின் காணி சுவிகரிப்பு மற்றும் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை சட்டத்தரணி செலஸ்டின் ஸ்டானிஸ்லாஸ் விளக்கியுள்ளார்.
மேலும் தமிழரின் நிலங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பின்வரும் காணொளியில் சுட்டிக்காட்டியுள்ளார்…

