சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் தற்போதும் 69 இலட்சம் பேர் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார(Shantha Bandara) தெரிவித்துள்ளார்.
அறுபத்தொன்பது லட்சம் பேரை தமது பொக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம் என்று யாராவது நினைத்தால் அது வெறும் கனவுதான் எனவும் அவர் குறிப்பிட்டார்.
69 இலட்சம் பேருக்காக போராடும் கட்சிகள்
69,000,000 மக்களுக்காக சில அரசியல் கட்சிகளும் தலைவர்களும் போராடுகிறார்கள், ஆனால் பெரும்பான்மையானவர்கள் இன்னும் கட்சியுடன் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் பொதுஜன பெரமுனவில் இருந்து எவரும் எந்த கட்சியிலும் இணையவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்சவிற்கு 69 இலட்சம் பேர் வாக்களித்தே அவர் அதிபராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.