வெற்றிமாறனின் விடுதலை 2 படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி என பலர் நடித்து இருக்கும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
விடுதலை முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் காட்சிகள் மிக குறைவாக இருக்கும், அதனால் இரண்டாம் பாகத்தில் வாத்தியார் பற்றிய காட்சிகள் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
8 நிமிடங்கள் நீக்கம்
நாளை விடுதலை 2 ரிலீஸ் ஆகும் நிலையில் இன்று இறுதிக்கட்ட பணிகளை வெற்றிமாறன் செய்து முடித்து இருக்கிறார். படத்தில் இருந்து 8 நிமிட காட்சிகளை நீக்கி இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். அதனால் தற்போது ரன்டைம் 2 மணி நேரம் மற்றும் 45 நிமிடங்களாக குறைந்து இருக்கிறது.
“இது படக்குழுவில் இருந்த எல்லாருக்குமே ஒரு learning experience. இது ஒரு பெரிய பயணம்” என்றும் வெற்றிமாறன் கூறி இருக்கிறார்.
Thank you #VetriMaaran sir for everything ❤️#ViduthalaiPart2 from tomorrow in theatres
An @ilaiyaraaja Musical #ViduthalaiPart2FromDec20
@sooriofficial @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo @ManjuWarrier4 @BhavaniSre @anuragkashyap72 #Kishore @menongautham… pic.twitter.com/UJZtbE6m7N— VijaySethupathi (@VijaySethuOffl) December 19, 2024