நடிகை ரேவதி
தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி.
1983ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடித்த முதல் படத்திலேயே மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்று சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 3 பட அப்டேட் குறித்து தயாரிப்பாளர் சொன்ன தகவல்
முதல் படத்தின் மூலமே ரேவதியின் மார்க்கெட் உயர அடுத்தடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரையுலகிலும் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தார்.
மௌன ராகம், புன்னகை மன்னன், கிழக்கு வாசல், தேவர் மகன், மறுபடியும், அஞ்சலி, மகளிர் மட்டும் என அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அவரின் நடிப்பை திறமையை காட்டியது. நடிகையாக மட்டுமில்லாது இயக்குனர் அவதாரமும் எடுத்தார்.
லேட்டஸ்ட் போட்டோ
தற்போது ரேவதி மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒரு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகர் அரவிந்த் நடிகை ரேவதியுடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் என்னது 80களின் கனவுக் கன்னி ரேவதி என்ன இப்படி ஆகிவிட்டார் என சோகமாக பார்க்கின்றனர்.