உலக புகழ்பெற்ற 97வது ஆஸ்கர் அகாடமி விருது வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் வெளியான படங்கள் மற்றும் அதில் நடித்தவர்கள், பணியாற்றிய கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு 97வது ஆஸ்கர் விருது விழாவில் வெற்றிபெற்றவர்கள் யார்யார் என்று இந்த பட்டியலில் பார்க்கலாம் வாங்க.
- ஏ ரியல் பெயின் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார் க்ரீன் கல்கின்.
-
சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை FLOW என்கிற அனிமேஷன் படம் வென்றது.
-
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை Wicked படத்திற்காக பால் டேஸ்வெல் வென்றுள்ளார். இதுகுறித்து அவர் மேடையில் பேசும்போது, “ஆஸ்கர் வெல்லும் முதல் கறுப்பின மனிதன் நான் தான்” என உணர்ச்சிபூர்வமாக பேசினார். அரங்கமே அவருக்கு எழுந்து நின்று கைதட்டியது.
- CONCLAVE என்கிற படம் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
- சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருதை THE SUBSTANCE திரைப்படத்திற்காக Pierre-Olivier Persin, Stéphanie Guillon மற்றும் Marilyne Scarselli ஆகியோர் வென்றுள்ளனர்
- சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதை Anora திரைப்படத்திற்காக ஷான் பேக்கர் வென்றுள்ளார்.
- Emilia Perez திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகை Zoe Saldana வென்றுள்ளார்.