முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக
இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், இணைத் தலைவர்களான ஆளுநர் பி.
எஸ். எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில்
மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (18)நடைபெற்றது.

இதன்போது,காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம்
உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே வடக்கு ஆளுநர் இதனை தெரிவித்தார்.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது...!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது…!

ரணில் வழங்கியுள்ள பணிப்புரை

இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற
நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ரணில்  வழங்கியுள்ள
பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.

வடக்கில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்! | Temporary Suspension Of Land Title Deeds In Np

யாழ்ப்பாண மாவட்டத்தில் 1500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும்
உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர்களை மீள்குடியேற்றுவது
தொடர்பில் விசேட கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான
மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார்
அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும்
செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

உலகின் சிறந்த விமான நிலையங்கள்: முதல் இடத்தை இழந்த சிங்கப்பூர்

உலகின் சிறந்த விமான நிலையங்கள்: முதல் இடத்தை இழந்த சிங்கப்பூர்

 காணி உறுதிப் பத்திரங்கள்

“உரித்து” காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த
தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வடக்கில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்! | Temporary Suspension Of Land Title Deeds In Np

அதற்கமையை மே மாத நிறைவுக்குள் வடக்கு மாகாணத்தில் 60,000 பேருக்கான காணி
உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான
கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த
திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் குழாய்க் கிணறுகள் அமைக்கும் செயற்பாடுகளை
உடனடியாக நிறுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா! மீண்டும் ஆதரவளித்த அமெரிக்கா

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா! மீண்டும் ஆதரவளித்த அமெரிக்கா

குழாய்க் கிணறுகள் அமைக்கும் செயற்பாடு

நிலக்கீழ் நீர் தொடர்பான
ஆய்வுகள் உரியவாறு மேற்கொள்ளாது சில தனியார் நிறுவனங்கள் குழாய் கிணறுகளை
அமைப்பதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு
முன்வைக்கப்பட்டது.

வடக்கில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்! | Temporary Suspension Of Land Title Deeds In Np

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச
திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஆளுநர், விதிமுறைகளை மீறும்
நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு  பணிப்புரை
விடுத்தார்.

நகர அபிவிருத்தி திட்டங்களின் போது பொதுமக்கள் இலகுவில் சேவைகளை
பெற்றுக்கொள்ளும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என ஆளுநர்
தெரிவித்தார்.

ஒவ்வொரு துறைசார் திட்டங்களும் வலயங்களாக பிரிக்கப்பட்டு
பொதுமக்கள் இலகுவில் அணுகக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என வடக்கு
மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் ஏமாற்றப்படும் சுற்றுலாப்பயணிகள்! பொங்கி எழுந்தார் டயானா கமகே

இலங்கையில் ஏமாற்றப்படும் சுற்றுலாப்பயணிகள்! பொங்கி எழுந்தார் டயானா கமகே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.