கடந்த 1991ம் ஆண்டு ரொமானியாவில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொமானியாவின் புச்சரெஸ்ட் பகுதியில் 1991ம் ஆண்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய இலங்கையர் ஜெர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக் குற்றச்சாட்டுக்காக 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மட்டக்களப்பு கடற்பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு
19 ஆண்டுகள் சிறைத்தண்டனை
எதிர்வரும் 23ம் திகதி குறித்த இலங்கையர்கள் ஜெர்மனியிலிருந்து ரொமானியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார்.
நாடு கடத்தப்பட்டதன் பின்னர் குறித்த இலங்கையர் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1991ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.
நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் ஜெர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத கடற்றொழிலை ஊக்குவிக்கும் இலங்கை அரசு: ரவிகரன் ஆதங்கம்
நாடாளுமன்ற வளாகத்தில் இடிந்து விழுந்த கூரை! பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |