முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடமாகாணத்தில் இடர் நிலைமைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் அதிகாரிகள்

எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக
இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார்
திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளனர். 

பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர்
செயலகத்தில் நேற்று (22.11.2024) இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் ஆரம்பத்தில்
கருத்துத் தெரிவித்த வடக்கு ஆளுநர், “எதிர்வரும் நாட்களில் தாழமுக்கம் ஒன்று
வங்கக் கடலில் உருவாகலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சட்டரீதியான நடவடிக்கை  

அதன் நகர்வுப் பாதை
சரியாக இன்னமும் கணிக்கப்படவில்லை ஆயினும், நாம் அதை எதிர்கொள்ளும் வகையில்
ஆயத்தங்களுடன் இருக்கவேண்டும்.

வடமாகாணத்தில் இடர் நிலைமைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் அதிகாரிகள் | Bad Weather Issue In Northen Preparatory Action

பருவமழை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் செப்டெம்பர் மாதத்துக்கு முன்னதாக,
எமது பிரதேசத்திலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும்
துப்பரவாக்கப்பட்டிருக்க வேண்டும். சில இடங்களில் வாய்க்கால்களை சட்டவிரோதமாக
ஆக்கிரமித்துள்ளனர்.

அவற்றை சட்டரீதியாக அணுகி உடனடியாக இடித்து அகற்றுங்கள்.
தேவையேற்படின் பொலிஸாரின் உதவியையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு திணைக்களங்களும் மற்றைய திணைக்களங்களைப் பார்த்துக்கொண்டிருக்காமல்
உடனடியாக இந்தப் பணிகளை செய்யுங்கள். மேலும் பல இடங்களில்
வாய்க்கால்களுக்குள், வீதிகளில் மக்கள் குப்பைகளை வீசுகின்றார்கள்.

அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதுதான் வழி. பல தடவைகள்
விழிப்புணர்வுகளை செயற்படுத்தியும் மக்களின் மனங்களில் மாற்றம்
ஏற்படாவிட்டால், சட்ட நடவடிக்கை ஊடாக தண்டிக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார். 

உரிய அதிகாரிகள் 

அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 வெள்ள அபாய இடர் பிரதேசங்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளதாகவும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,
முல்லைத்தீவு மாவட்டச் செயலர் இங்கு குறிப்பிட்டுள்ளார். 

வடமாகாணத்தில் இடர் நிலைமைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் அதிகாரிகள் | Bad Weather Issue In Northen Preparatory Action

அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்திலும் இடரை எதிர்கொள்வதற்கு தயாரான நிலையில் இருப்பதாக
மேலதிக மாவட்டச் செயலர் தெரிவித்ததுடன் மன்னார் மாவட்டத்தில், மன்னார் மாவட்ட
மருத்துவமனையூடாகச் செல்லும் கால்வாய் துப்புரவு செய்யப்பட வேண்டும் என்று
குறிப்பிட்ட மாவட்டச் செயலர், மக்கள் இடரின் போது இடம்பெயர நேரிட்டால் அவர்களை
தங்க வைப்பதற்குரிய நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்வாய்கள் அனைத்தும் ஏற்கனவே துப்புரவு
செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டியதுடன் நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர், யாழ். மாவட்டத்தில் நேற்று 6 மணி
நேரத்தினுள் 130 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவானமையால் திடீரென வெள்ள
நிலைமை ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறு வடக்கில் உள்ள பகுதிகளில் இடர் முகாமைத்துவம் முன்னாயத்த ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துறைசார் அதிகாரிகள் ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர். 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.