கிளிநொச்சி(Kilinochchi) மாயவனூர் கிராமத்தில் சுமார் 35 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட
நிதியில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டு
செயலிழந்த நிலையில் காணப்படும் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை மீள
ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று (18.04.2024)
மாவட்ட அரசாங்க அதிபர் (பதில்) சு.முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
கனடாவை அதிர வைத்த கொள்ளை: தமிழர் உட்பட அறுவர் நிஷான் துரையப்பா குழுவால் அதிரடி கைது
சூரிய மின் உற்பத்தி
இந்த கலந்துரையாடல் ஆரம்பிப்பதற்கு முன்னர் நீர் வளம் கொண்ட புழுதியாறு
குளத்தினை சென்று பார்வையிட்டு அதன் சாதக பாதக நிலைமைகளையும் கேட்டு அறிந்து
கொண்டதையடுத்து மாயவனூர் பாடசாலை மண்டபத்தில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மாவட்டத்திலே மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகின்ற குறித்த
பிரதேசத்தில் இருக்கின்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு
ஆரம்பிக்கப்பட்ட திட்டமானது செயலிழந்து காணப்படுகின்றது.
இத்திட்டத்தை மீள
நடைமுறைப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் நன்மையடைவதற்கான வாய்ப்புகள்
இருக்கின்றன.கடந்த காலத்தில் எரிபொருள் மூலம் இயங்கும் நீர்ப்பம்பியை கொண்டே நீர்
விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.
எதிர்காலத்தில் சூரிய மின் உற்பத்தி மூலம்
மேற்கொள்ளப்படும் நீர்ப்பம்பியை பயன்படுத்தி குறைந்த விலையில்
விவசாயிகளுக்கு நீரை பெற்றுக் கொடுக்கின்ற ஒரு செயற் திட்டத்தை
நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அதன் சாத்திய கூற்றுக்களை ஆராய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேற்படி கலந்துரையாடலில் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர்
ஸ்ரீபாஸ்கரன், கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தன் மற்றும் பதவி நிலை
உத்தியோகத்தர்கள், பிரதேச விவசாயிகள், கிராம அலுவலர் என பலர் கலந்து
கொண்டுள்ளனர்.
வடக்கில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்
பிரித்தானியாவில் குடியுரிமை விற்பனை : உள்துறை அலுவலகத்தில் மோசடி அம்பலம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |