காலி – ஹிக்கடுவ (Galle – Hikkaduwa) தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘நயன குமாரி’ (Nayana Kumari) என்ற
தொடருந்தில் இருந்து 10 மில்லியன் ரூபா பெறுமதியான மின்சார கேபிள்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (18.04.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது குறிப்பாக பயணிகள் பெட்டிகளுக்குள் விளக்கு அமைப்பை
இயக்குவதற்கு பயன்படுத்தப்படும் கேபிள்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையில் மக்களின் காவலனாக வாழ்ந்த அரசியல்வாதி – அலையென குவிந்த மக்கள் வெள்ளம்
பாதுகாப்பு நடவடிக்கைகள்
இந்நிலையில், இவற்றின்
செயல்பாட்டு முறை மின்சார சுற்றுகள் பற்றிய அதிநவீன புரிதலுடன் தொடர்புடையதோடு அத்தகைய தொழில்நுட்பத்தை நன்கு அறிந்தவர்களே கேபிள்களை
அகற்றியிருக்க முடியும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க பாதுகாப்பு
நடவடிக்கைகளை அதிகரிக்க தொடருந்து அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தி்ன் மூலம் குற்றச் செயல்களுக்கு எதிராக, முக்கியமாக
உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை காட்டுவதாக அதிகாரிகளுக்கு
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு
மக்களே தவறவிடாதீர்கள்! தமிழர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட உடனடி வேலைவாய்ப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |