முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை: நிபுணர்கள் எச்சரிக்கை

சர்வதேச பத்திரப்பதிவுதாரர்களுடன், ஏற்பட்டுள்ள வழித் தடையால், நெருக்கடியால்
பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்
வரவிருக்கும் மதிப்பாய்வு ஆகியவற்றில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது என்று
நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

12 பில்லியனுக்கும் அதிகமான கடனை மறுசீரமைப்பது தொடர்பான சர்வதேச
பத்திரதாரர்களுடன் ஒப்பந்தம் செய்யத் தவறிவிட்டதாக இலங்கை கடந்த செவ்வாயன்று
அறிவித்தது,

இது சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டாயத் தேவையாகும்.

கொழும்பை தளமாகக் கொண்ட பொருளாதார நிபுணர் தலால் ரஃபி, இலங்கை, கடன்
தரமதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான நிச்சயமற்ற நிலையை
எதிர்கொண்டுள்ளதால், பொருளாதார வீழ்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் என்று
குறிப்பிட்டார்.

கனடா விசிட்டர் விசா - தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

கனடா விசிட்டர் விசா – தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

பிணை எடுப்பு ஒப்புதல்

கடந்த ஆண்டு மார்ச் மாதம், இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும்
சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், 48 மாத
ஏற்பாட்டில் சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதிக்கு
ஒப்புதல் அளித்தது.

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை: நிபுணர்கள் எச்சரிக்கை | Roadblocks With International Underwriters

இலங்கை தற்போது அதன் இரண்டாவது மதிப்பாய்வில் உள்ளது மற்றும் இந்த ஆண்டு
மார்ச் மாதம் எட்டப்பட்ட பணியாளர் அளவிலான உடன்படிக்கைக்கு குழுவின்
ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

1965 முதல் 2016 வரை, இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன் மொத்தம் 16
திட்டங்களைக் கொண்டிருந்தது.

தற்போதைய வேலைத்திட்டம் பதினேழாவது திட்டமாகும்.

இந்தநிலையில், பத்திரகாரர்களுடன் உடன்படிக்கையை எட்டுவதில் ஏற்படும் தாமதம்,
ஜூன் மாதம் திட்டமிடப்பட்டுள்ள இலங்கையின் வரவிருக்கும் சர்வதேச நாணய
நிதியத்தின் மீளாய்வையும் பாதிக்கலாம் என்று ரஃபி கூறினார்.

யாழ். கரவெட்டியில் கைக்குண்டு ஒன்று மீட்பு

யாழ். கரவெட்டியில் கைக்குண்டு ஒன்று மீட்பு

கடன் மறுசீரமைப்பு

கடன் மறுசீரமைப்பு என்பது, சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு முக்கிய
நிபந்தனையாக இருப்பதால், அது, சபையின் ஒப்புதலுக்காக எடுக்கும் காலத்தில்
தாக்கத்தை ஏற்படுத்தும்.”

இதேவேளை, நாட்டின் வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பேச்சுவார்த்தை
செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக்
குவிக்கிறது.

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை: நிபுணர்கள் எச்சரிக்கை | Roadblocks With International Underwriters

அத்தகைய சூழ்நிலையில் அவசரமாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தத்தின்
நிலைத்தன்மையும் பற்றிய கவலைகளை எழுப்புகிறது.

அவசரமான சூழலில், ஒரு சாதகமற்ற ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது,

இதன்போது ஒப்புக் கொள்ளப்பட்ட கடன் செலுத்தல், அடுத்த ஆண்டுகளில் இலங்கை
செலுத்த முடியாது போகலாம் என்றும் ரஃபி குறிப்பிட்டார்.

இருப்பினும், Oxford Economics இன் உலகளாவிய வளர்ந்து வரும் சந்தை
மூலோபாயத்தின் இயக்குனர் Sergi Lanau, இலங்கையில் விரைவான ஒப்பந்தம் பற்றிய
பரவலான எதிர்பார்ப்புகள் இருப்பதாக தாம் நினைக்கவில்லை என்று
குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஆரம்பத்திலிருந்தே பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை மற்றும்
வெளிப்படைத்தன்மையின்மையை வலியுறுத்தி வந்த மத்திய வங்கியின்.

முன்னாள் பிரதி
ஆளுனர் டபிள்யூ.ஏ. விஜேவர்தன, எந்த தரப்பினருக்கும் மற்றைய தரப்பை அடையும்
எண்ணம் இருக்கவில்லை. எனவே, உடன்பாட்டை எட்டத் தவறிய விளைவு எதிர்பார்க்காத
ஒன்றல்ல என்று விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலில் அதிர்ந்த ரஃபா நகரம்: ஆறு குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் அதிர்ந்த ரஃபா நகரம்: ஆறு குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.