முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து உலக வங்கி அதிகாரிகளுடன் ஜீவன் கலந்துரையாடல்

பெருந்தோட்ட மக்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் பற்றியும், அவர்கள்
எதிர்கொள்ளும் சில சவால்களை உரியவாறு கையாள்வதற்கான இலக்கிடப்பட்ட
நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும் உலக வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன்
தொண்டமான்(Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் 2024ஆம் ஆண்டுக்கான
கோடைகால கூட்டத்தொடர் கடந்த 15ஆம் திகதி வொஷிங்டனில் ஆரம்பமான நிலையில், 17 –
19ஆம் திகதி வரை முக்கிய அமைச்சர் மட்டக் கூட்டங்கள் நடைபெற்றன.

கனடாவில் புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

புதிய செயற்றிட்டம்

இக்கூட்டத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி
அமைச்சர் ஜீவன் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் நீர்வழங்கல் துறையில் புதிய செயற்றிட்டமொன்றை அறிமுகப்படுத்துவதை
முன்னிறுத்தி உலக வங்கியின் நீர்வழங்கல் பிரிவுடன் நெருங்கிப் பணியாற்றி
வருகின்றது.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து உலக வங்கி அதிகாரிகளுடன் ஜீவன் கலந்துரையாடல் | Jeevan S Discussion With World Bank Officers

நீர்வழங்கல் துறையில் தாம் முன்னெடுத்து வரும் மறுசீரமைப்புக்களுக்கு
ஆதரவளிக்கக் கூடியவாறான புதிய செயற்றிட்டமொன்று குறித்து இணக்கப்பாடு
எட்டப்பட்டது.

அதேபோன்று உலக வங்கி, சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம், பல்தரப்பு முதலீட்டு
உத்தரவாத முகவரகம் ஆகியவற்றின் உதவியுடன் தேசிய நீர்வழங்கல் மற்றும்
வடிகாலமைப்பு சபையின் கடன்களை மீள் ஒருங்கிணைக்கவும், அதன் நிதியியல்
ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் முடியும் எனவும், அரச – தனியார் துறையினரின்
கூட்டிணைவின் மூலம் நீர்வழங்கல் திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும்.

இஸ்ரேலை தாக்கிய ஈரானிய இராணுவம் தொடர்பில் வெளியான தகவல்

இஸ்ரேலை தாக்கிய ஈரானிய இராணுவம் தொடர்பில் வெளியான தகவல்

தொழிற்பயிற்சி நிலையங்கள்

பெருந்தோட்ட மக்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் பற்றியும்,
அவர்கள் எதிர்கொள்ளும் சில சவால்களை உரியவாறு கையாள்வதற்கான இலக்கிடப்பட்ட
நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும் உலக வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன்.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து உலக வங்கி அதிகாரிகளுடன் ஜீவன் கலந்துரையாடல் | Jeevan S Discussion With World Bank Officers

குறிப்பாக, தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான தொழிற்பயிற்சி
நிலையங்களை விஸ்தரிப்பதற்கான உதவி, சிறுவர்களின் போசணை, கல்வி மற்றும்
பாதுகாப்பு ஆகியவற்றைக் கண்காணிப்பதற்கு ஏதுவான ஆரம்ப சிறுவர் பராமரிப்பு
செயற்றிட்டத்தைக் கட்டியெழுப்புதல், பெண் முயற்சியாளர்களை ஊக்குவிக்கக்கூடிய
இலக்கிடப்பட்ட நிதி உதவித்திட்டங்களை அறிமுகப்படுத்தல் என்பன பற்றி
ஆராயப்பட்டது.

அத்தோடு பின்தள்ளப்பட்ட சமூகங்களின் நீர், சுகாதாரம் மற்றும் சேவை வழங்கல்
தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான பெறுபேறை அடிப்படையாகக் கொண்ட நிதியுதவி
செயற்றிட்டத்தை சகல தரப்பினருடனும் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்

அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையரின் விபரங்களை வழங்குமாறு வேண்டுகோள்

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையரின் விபரங்களை வழங்குமாறு வேண்டுகோள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.