புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விசுவமடு -10 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த சேர்ந்த கிருஷ்ணன் கிருஸ்ணராசா என்ற 52 வயதுடைய 05 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நடராஜனுக்கு தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம்
காவல்துறையினர் விசாரணை
இதேவேளை குறித்த குடும்பஸ்தர் குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று வானில் தோன்றவுள்ள அரிய காட்சி…பார்வையிடும் நேரம் அறிவிப்பு!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |

