யாழ்ப்பாணம் (Jaffna) – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குறித்த போராட்டமானது நேற்றையதினம் மீண்டும் ஆரம்பமாகி இன்று வரை (23.04.2024) மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள்
முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
இந்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்ற வெளிநாட்டு பிரஜை: நாடு கடத்த நடவடிக்கை
மக்கள் எதிர்ப்பு
இதற்கமைய, இன்றையதினம் பௌர்ணமி வழிபாடுகள் விகாரையில் இடம்பெறவுள்ள நிலையில்
அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் முகாமாக இந்த போராட்டம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ்,
பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டம்! அதிகாரிகளின் மோசமான செயல்
இலங்கையில் இராமாயண பாதைத் திட்டம் ஆரம்பம்!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |