சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன விலகுவதற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது நீதிமன்றத்தின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் படி, கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலகும் அவர், கட்சியின் போஷகர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பாடசாலை விடுமுறை: சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்
முறைப்பாடு
அதேவேளை, கட்சியில் கடும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், இரு பிரிவினரும் இரண்டு பதில் தலைவர்களின் பெயர்களைக் கூறி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கையளித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
அத்தோடு, இந்த நியமனங்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன்: விஜயதாஸ ராஜபக்ச உறுதி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |