ஆண்கள் பெண்கள் இருவருக்குமே தொப்பை என்பது பெரும் தொல்லையாக உள்ளது.
தற்போதைய சூழல், நாம் பார்க்கும் வேலை, உண்ணும் உணவு, பரம்பரை என தொப்பை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
தொப்பை குறைக்கும் நோக்கோடு உணவை குறைத்தல், மாத்திரைகளை உட்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளினால் பக்க விளைவுகள் ஏற்படுகூடும்.
கோடை காலத்தில் தண்ணீர் குடிக்காவிட்டால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா!
உடற்பயிற்சி
தொப்பை குறைக்க பல வழிகள் இருந்தாலும், உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்தது.
அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது.
எனவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.
எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருளாக பார்க்கப்படுகின்றது.
தொப்பையை குறைக்கும் நடைமுறைகள்
எனவே காலையில் எழுந்ததும், நீரில் 2 கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்து, தினமும் குடிக்கலாம்.
காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, லவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2 அல்லது 3 முறை குடிக்க வேண்டும்.
இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருளாக பார்க்கப்படுகின்றது.
இரண்டு கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்ட பிறகு சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.
உடல் ஆரோக்கியம்
உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.
தொடர்ந்து 3 அல்லது 4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும்.
எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும்.
இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.
இவ்வாறான சில நடைமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |