அரசமானிய நிகழ்ச்சித்திட்டம் மூலம் முல்லைத்தீவு (Mullaitivu) கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட
மக்களுக்கு கலாவதியான அரிசி பொதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்சித்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் தற்போது மக்களுக்கு அரிசி பொதி
விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே இந்த அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
காசாவின் வெகுஜன புதைகுழிகள் குறித்து விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை
முறைப்பாடு
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரிசி பொதியில் 2024.03.25 என காலாவதி திகதி
அச்சிடப்பட்டிருக்கின்றது. அத்தோடு வழங்கப்பட்ட குறித்த பொதி அரிசியும்
பழுதடைந்த நிலையிலையே இருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் உமாமகளிடம்
தொடர்பு கொண்டு வினவிய போது, வழங்கப்பட்டுள்ள அரிசி பொதிகள் சில
காலாவதியானதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து, நேற்றையதினம்
அரிசி வழங்கப்பட்டவர்களின் தரவுகளை இன்றையதினம் பெற்று மீண்டும் அவர்களுக்கு
தரமான அரிசி பொதிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |