கிளிநொச்சி (Kilinochchi) புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதா சிலைக்கு கிளிநொச்சி
பங்குத்தந்தை தலைமையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தரிசனமானது, இன்று (25.04.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, புனித மாதாக்கள் போன்று வேடமணிந்து பேண்ட் (Band) இசை மற்றும் தமிழ் இன்னியம் மூலம் வரவேற்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியை வந்தடைந்த மருதமடு மாதாவின் திருச்சொரூபம்
விசேட வழிபாடு
இதனை தொடர்ந்து, விசேட வழிபாடு இடம்பெற்றதுடன் மாவட்டத்தின் பல பிரதேசங்களிற்கும்
திருச்சொரூப பயணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மடுமாதா முடிசூடப்பட்டு 100ஆவது ஆண்டு நிறைவையொட்டி குறித்த திருச்சொரூப
தரிசனம் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வில், மன்னார் ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், 1999ஆம் ஆண்டு 75ஆம் ஆண்டு பூர்த்திக்காக இவ்வாறு பயணம்
மேற்கொள்ளப்பட்ட நிலையில் யுத்தம் காரணமாக கிளிநொச்சி நகர் உள்ளிட்ட சில
பகுதிகளுக்கு சென்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் வாரம் முதல் வங்கிக் கணக்கிற்கு வரப்போகும் பணம்: வெளியான அறிவிப்பு
இயக்கச்சியில் சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கும் உணவு வகைகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |