முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ் அரச ஊழியரின் அசமந்த போக்கு : குற்றம் சுமத்தும் கடற்றொழிலாளர்கள்

யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருக்கு யாழ் கடற்றொழிலாளர்களால்  அனுப்பப்பட்ட கடித்திற்கு 3 ஆண்டுகளுக்கு மேலாக பதிலளிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கமானது, தமது அங்கத்தவர்களில்
ஒருவரது கரவலை தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் மற்றைய இருவருக்கும் சேதமடைந்த கரவலைகளுக்கென தமது
சொந்த நிதியிலிருந்து கடன் கொடுக்க தீர்மானித்துள்ளது. 

இதனை தொடர்ந்தது, பொதுச் சபைக் கூட்டத்தின் ஏக மனதான
தீர்மானம் நிறைவேற்றி யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி
ஆணையாளருக்கு அனுமதிக்காக கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.

கொழும்பில் பிரமாண்ட அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல் திறந்து வைப்பு

கொழும்பில் பிரமாண்ட அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல் திறந்து வைப்பு

அனுமதி கடிதம் 

இது
தொடர்பாக யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், வடமராட்சி
கிழக்கு பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தியின் அனுமதிக்கு அனுப்பியுள்ளதாக
குறித்த கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு பதில்
அனுப்பியுள்ளார்.

யாழ் அரச ஊழியரின் அசமந்த போக்கு : குற்றம் சுமத்தும் கடற்றொழிலாளர்கள் | Jaffna Governmennt Officer S Irresponsibility

ஆனால், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் இதுவரை அனுமதி வழங்காததால் குறித்த
கடன் வழங்குவதற்க்கான அனுமதியை வழங்க முடியவில்லை என கொட்டோடை
கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் கோரிக்கை
ஊடாக கேட்கப்பட்ட போது தங்களுக்கு அவ்வாறான எந்தவொரு கடிதமும்
அனுப்பப்படவில்லை என பதில் அனுப்பப்பட்டுள்ளதாக கொட்டோடை கடற்றொழிலாளர்
கூட்டுறவு சங்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் அபகரிக்கப்படும் தமிழர்களுடைய பூர்வீக நிலம்: ரவிகரன் சீற்றம்

முல்லைத்தீவில் அபகரிக்கப்படும் தமிழர்களுடைய பூர்வீக நிலம்: ரவிகரன் சீற்றம்

கரவலை தொழிலாளர்கள் 

இந்த விடயத்தில் யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரும்,
பிரதேச செயலரும் இணைந்த சங்கத்தின் செயற்பாட்டினை முடக்குவதற்காக செயற்பட்டு
வருவதுபோல் உள்ளதாகவும் சங்க பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

யாழ் அரச ஊழியரின் அசமந்த போக்கு : குற்றம் சுமத்தும் கடற்றொழிலாளர்கள் | Jaffna Governmennt Officer S Irresponsibility

மேலும், உண்மையில் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் கூட்டுறவு அபிவிருத்தி
திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு சங்கம் எனவும் அதற்கான
அனுமதிகளை பிரதேச செயலரிடம் கோருவது என்பது பொருத்தமான ஒன்றல்ல. இது
வேண்டுமென்று மேற்கொள்ளப்படுகின்ற ஒரு செயலாக அவதானிக்கப்படுகிறது என குறித்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 

கடந்த 2021ஆம் ஆண்டு கடற்கரையில் பாதிக்கப்பட்ட மூன்று கரவலை தொழிலாளர்களும்
தமது கரவலை தொழிலை செய்ய முடியா நிலையில் தமது தொழிலை இடைநிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் மனித உரிமைகள்
ஆணைக்குழுவில் முறையிட்டு பாதிக்கப்பட்ட மூன்று கரவலை உரிமையாளர்களுக்கும்,
அவர்களுடன் கரவலை தொழிலில் ஈடுபட்ட முப்பது தொழிலாளர்களுக்கும் நட்ட ஈடு கோரி
முறையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக தடை : வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக தடை : வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.