ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து பொய்யானது என நிரூபணமாகியுள்ளதால், இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிட்டு நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நபர்களை கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25) இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்துத் தெரிவிக்கையில்,
சிறையில் அடைக்கப்படுவாரா மகிந்தானந்த..! தீர்ப்பிற்கான நாள் குறிப்பு
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள்
இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தமக்கு தெரியும் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். அவர் தான் வெளியிட்ட கருத்து தெடார்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எமக்கு கிடைத்த உத்தியோகபூர்வமற்ற தகவலின்படி மைத்திரி தெரிவித்த தகவல் பொய்யானது, இந்த முன்னாள் அதிபர் தேசிய பாதுகாப்பை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்: சி.ஐ.டியின் திரிபோலி படைப்பிரிவை குற்றம்சாட்டும் தமிழ் எம்.பி!
பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதன் மூலம்
சரியான நேரத்தில், மாஜிஸ்திரேட் இதைப் பற்றி யோசித்து, இது தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் விஷயம் என்பதால் கோப்பைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு சாவியை விட்டுவிட முடிவு செய்தார். இல்லாவிட்டால் இந்நாடு தீப்பற்றி எரிந்திருக்கும்.
இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கும் நபர்களை கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |