இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்டமாக இன்று(26) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகின்ற நிலையில் கேரளா மற்றும் கர்நாடகா உட்பட 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் கடந்த 19 ஆம் திகதி வாக்குப்பதிவு நடந்த நிலையில் 21 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
போலி ஆவணங்கள் மூலம் உந்துருளிகள் விற்பனை: அதிரடியாக கைது செய்யப்பட்ட மோசடி கும்பல்
யூனியன் பிரதேசங்கள்
இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று(26) தேர்தல் இடம்பெறுகின்றது.
அந்தவகையில் கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1) மற்றும் காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் தேர்தல் நடக்கின்றது.
இரண்டாம் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் பீட்டுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
வாக்குப்பதிவு இயந்திரங்கள்
எனவே மீதமுள்ள 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடப்பதோடு இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம்(24) மாலையிலேயே பிரசாரம் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் இது மாலை ஆறு மணி வரை நடைபெறவுள்ளது.
இதனடிப்படையில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரக்குமுத்திரை(சீல்) வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
மேலும் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15.88 கோடியாகவுள்ள நிலையில் இவர்கள் வாக்களிப்பதற்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொய்யான தகவல் :மைத்திரியை கைது செய்ய கோருகிறார் எம்.பி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |