ஈ – விசா பெற்றுக் கொள்வோருக்கு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இணைய வழியில் ஈ – விசா பெற்றுக் கொள்வோர் www.immigration.gov.lk என்ற முகவரியை மட்டும் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ம் திகதி முதல் புதிய விசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.
மக்களை ஏமாற்றும் மோசடி
போலி இணைய தளங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஈ – விசா பெற்றுக்கொள்வோர் குடிவரவு குடியகழ்வு திணைக்கள இணைய தளத்தின் ஊடாக மட்டும் பிரவேசித்து விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகழ்வு திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |