2024 ஆம் ஆண்டுக்கான மிகவும் சக்திவாய்ந்த இராணுவ படைகளை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலை சுமார் 145 நாடுகளின் இராணுவங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்பவற்றை ஆராய்ந்து குளோபல் ஃபையர்பவர்(Global Firepower)என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சுமார் பத்து வருடங்களாக மிகவும் வலிமை வாய்ந்த இராணுவ படைகளை கொண்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவை விட்டு வெளியேறும் வட்ஸ்அப் நிறுவனம்! வெளியானது காரணம்
அமெரிக்க இராணுவம்
அத்தோடு, ஒரு வருடத்திற்கு மாத்திரம் அமெரிக்கா தனது இராணுவத்திற்கு 761.7 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக கூறப்படுகிறது.
அதேவேளை, அமெரிக்காவிற்கு அடுத்தப் படியாக உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ரஷ்யாவும் சீனாவும் பெற்றுள்ளன.
இந்திய இராணுவம்
அதையடுத்து, வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தை இந்தியா பெற்றுள்ளதுடன் அதற்கு வருடத்திற்கு சுமார் ரூ.5.94 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
தென் கொரியாவை விட முன்னணியில் இருந்த பிரித்தானியா தற்போது பின் தங்கியுள்ள நிலையில் ஐந்தாவது இடத்தில் தென்கொரியாவும் ஆறாவது இடத்தில் பிரித்தானியாவும் இருக்கிறது.
10 ஆவது இடம்
மேலும், வெளிவந்துள்ள இராணுவ பட்டியலின் படி ஜப்பான், துருக்கி ஆகிய நாடுகள் 7 மற்றும் 8 ஆம் இடங்களை பிடித்துள்ளன.
இந்நிலையில், இந்த பட்டியலில் 9 ஆம் மற்றும் 10 ஆம் இடங்களை எப்போதும் போலவே பாகிஸ்தான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யூதர்களின் பூர்வீகம் ஈராக்: முடிவிலியாக தொடரும் மத்தியகிழக்கு பதற்றம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |