Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமடைந்து விட்டதாகவும், பொருளாதாரத்தில் தற்போது வளர்ச்சி உருவாகி வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி 2022இல் 360 ரூபாவாக இருந்த நிலையில், இன்று அது 300 ரூபாயாக குறைவடைந்துள்ளமையை வளர்ச்சிக்கு உதாரணமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
அத்துடன், இலங்கையில் மாற்று விகிதங்கள் சந்தையில் நிர்ணயிக்கப்பட்டவை என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமாகும்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி
ரூபாவின் பெறுமதி
இது, அந்நிய செலாவணி சந்தையில் வழங்கல் மற்றும் தேவை இயக்கவியலுக்கு ஏற்ப நாணய மதிப்புகளை மாற்றுகிறது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைவதால், குறிப்பிட்ட காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வது மலிவாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது கொள்வனவு சக்தியை அதிகரிப்பதோடு பணவீக்க அழுத்தங்களைக் குறைக்கவும் நாட்டின் கடன் சுமையை கட்டுப்படுத்தவும் பங்களிக்கும் எனவும் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம்
ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்! இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |