ஹாலிஎல பிரதேச செயலகத்தில் மக்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் அரச வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் (25) விநியோகிக்கப்பட்ட அரிசி, பூச்சி கூடுகளுடன் பாவனைக்கு தகுதியற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மக்கள் ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பம்
இதனை உறுதிப்படுத்திய ஹாலிஎல பொது சுகாதார பரிசோதகர் தனுஜய பிரதீப், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகில் முதல் முறையாக நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் நகரம்
அரிசி விநியோகம்
அரசாங்கத்தினால் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசி விநியோகம் ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்று வருவதாக ஹாலிஎல பிரதேச செயலாளர் டபிள்யூ.எம்.சி.வீரசிங்க தெரிவித்தார்.
ஈராக்கில் பிரபல ரிக் ரொக் சமுக ஆர்வலரான பெண் சுட்டுக்கொலை
அண்மையில், பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுக்கு தகுதியற்ற அரிசியும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |