உலகின் மிகவும் பிரபல சுற்றுலாதளமான வெனிஸ் நகரம், முதன்முறையாக, சுற்றுலாப்பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் விதிக்கத் துவங்கியுள்ளது.
வெனிஸ் நகரமானது இத்தாலியிலுள்ள பிரபல சுற்றுலாத்தளமாகும்.
தற்போது, அங்கு உலகிலேயே முதன்முறையாக, சுற்றுலாப்பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் விதிக்கும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது.
மனித உடலமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி
வெனிஸ் நகரம்
அதற்கமைய, வெனிஸ் நகரத்துக்கு சுற்றுலா செல்ல நுழைவுக்கட்டணமாக 5.37 டொலர்கள், அதாவது இலங்கை மதிப்பில், 1,593.46 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.
வெனிஸ் நகரத்துக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால், அதனை கட்டுப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வெறும் 50,000 மக்கள் வாழும் வெனிஸ் நகரத்தில், வருடத்திற்கு 30 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.
கனடாவில் சூரிய கிரகணத்தை நேரடியாக பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை
நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் திட்டம்
வெனிஸ் நகரத்துக்கு சுற்றுலா செல்ல நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் நேற்றுடன் (26) நடைமுறைக்கு வந்துள்ளது.
இதேவேளை, இந்த கட்டணம் தற்காலிகமானது எனவும், சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும், ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி முதல், ஜூலை மாதம் 14ஆம் திகதி வரைதான் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என கூறப்படுகின்றது.
மேலும்,
கட்டணம் செலுத்தத் தவறுவோருக்கு, நுழைவுக்கட்டணத்துடன் 53.63 டொலர்கள் முதல் 321.77 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Venice is leading the way with a tourist tax. Other great European cities should follow suit https://t.co/Sow3kJ1AvP
— Bradley Dodd (@BradDodd) April 25, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |