Courtesy: Sivaa Mayuri
இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது.
எனினும் வருடாந்த இறப்புகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை தற்போது 280,000 ஆகக் குறைந்துள்ளது
இதனை திணைக்களத்தின் சிரேஸ்டப் பிரதிப் பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிகா கணேபொல தெரிவித்துள்ளார்.
அதிகரித்த மரணங்கள்
இதற்கிடையில், 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் அவதானிக்கப்பட்ட 140,000 என்ற அளவில் இருந்த மரண எண்ணிக்கை, 2020க்கு பின்னர் 180,000 மாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
எனினும் இதற்கான காரணங்களை அவர் குறிப்பிடவில்லை.
இந்த நிலைமை இலங்கையின் சனத்தொகை வளர்ச்சியை பாதகமாக பாதிக்கும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கிய விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள்
அரச பேருந்தில் கசிப்பு கடத்திய இருவர் பொலிஸாரால் கைது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |