முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழில்… அதிரடியாக நால்வர் கைது!

சட்டவிரோதமாக கடலட்டைகளை கடத்த முயன்ற நான்கு பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் (28) மன்னார் பேசாலை கடற்பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத கடற்தொழில் நடைமுறைகளைத் தடுக்கவும், உத்தியோகபூர்வ கடற்தொழில் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்திலும் சிறிலங்கா கடற்படை தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

யாழில் நிரந்தர வேலைவாய்ப்பை வலியுறுத்தி வீதிக்கிறங்கிய பட்டதாரிகள்

தேடுதல் நடவடிக்கை

அதன்படி, நேற்றைய தினம் (28) இலங்கையின் வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி கஜபாவிற்கு சொந்தமான கடற்படைப் பிரிவினர் பேசாலை கடற்பரப்பில் இலங்கை கடலோர காவல்படையின் உதவியுடன் இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தமிழர்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழில்... அதிரடியாக நால்வர் கைது! | Sl Navy Arrest 04 For Illegal Fishing In Mannar

இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்த 04 பேர் கைது செய்யப்பட்டது மாத்திரமல்லாமல் அவர்கள் பிடித்த 343 கடலட்டைகளையும் அதற்கென பயன்படுத்திய 02 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற தாய்...தீவிரமடையும் விசாரணை!

பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற தாய்…தீவிரமடையும் விசாரணை!

சட்ட நடவடிக்கை

இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மன்னார் மற்றும் பேசாலை பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் 25 முதல் 52 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

தமிழர்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழில்... அதிரடியாக நால்வர் கைது! | Sl Navy Arrest 04 For Illegal Fishing In Mannar

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 04 சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் மற்றும் படகுகள் என்பன, மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
இலங்கையில் குறைவடைந்த தொழிலாளர் எண்ணிக்கை: மத்திய வங்கியின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்