பாகிஸ்தானிலிருந்து மீண்டும் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை அத்தியாவசிய உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த வெங்காயத் தொகை நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டவுடன் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அவற்றைச் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
பெரிய வெங்காய விலை
தற்போது புறக்கோட்டை பொதுச் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அந்த வெங்காயத்தின் சில்லறை விலை 200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த காலங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பெரிய வெங்காயத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 700 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கான கொடுப்பனவுகள்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு
கனடாவில் ஈழத்தமிழ் அரசியல் பிரமுகர் மரணம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |