அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கும் பழக்கம் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது.
இந்த நாளில் தொடங்கியது முடிவில்லாமல் வளரும் என்று நம்பப்படுகிறது. எனவே மக்கள் தங்கள் செல்வமும் அதிர்ஷ்டமும் வளரும் என்று நம்பி அட்சய திருதியை அன்று தங்கத்தை வாங்குகிறார்கள்.
எனினும், எந்த நேரத்தில் தங்கம் வாங்குவது என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் உள்ளன.
அட்சய திருதியை
இந்த ஆண்டு அட்சய திருதியை மே மாதம் 10 ஆம் திகதி அதிகாலை 4.17 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.50 மணி வரை தொடர்கிறது.
நிலவின் இருண்ட பகுதிக்கு ரோபோவை அனுப்பும் சீனா!
இந்த நாளிள் சுப முகூர்த்தம் காலை 5:33 முதல் 7:14 வரை இருக்கும். அமிர்த முகூர்த்தம் காலை 8:56 முதல் 10:37 வரை இருக்கும் என்பதோடு மதியம் 12.18 மணி முதல் 1.59 மணி வரை சுபமுகூர்த்த நேரங்கள் உள்ளன.
அதேபோல், மாலை 5.21 மணி முதல் இரவு 7.02 மணி வரை சிறிய முகூர்த்தங்கள் உள்ளன. இந்த நேரங்களில் தங்கம் வாங்கலாம்.
இதேவேளை, அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைப்பது என மக்கள் நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலக சமாதானம் மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தும் இலங்கை!
ஜே.வி.பி ஆட்சிக்கு முட்டுக்கட்டையாகும் முன்னாள் அதிபர்கள்! அனுர சாடல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |