Courtesy: uky(ஊகி)
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கட்டடமொன்றில் உள்ள தமிழ் எழுத்துக்கள் தொடர்பில் கருத்துக்களை தமிழார்வலர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு முனுள்ள தமிழ் எழுத்துக்கள் சிலவற்றின் வடிவங்களை அங்கு அவதானிக்க முடிகிறது.
தமிழ் மொழி எழுத்துக்கள் காலத்துக்கு காலம் பலமுறை எழுத்துச் சீர் திருத்தங்களைப் பெற்று வந்துள்ளது.
1990 ஆம் ஆண்டுக்கு பின்னரான எழுத்துச் சீர்த்திருத்தத்தின் பின்னர் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள பல எழுத்துக்கள் இன்றுள்ள நிலையை அடைந்திருந்தன.
எழுதுதலை இலகுவாக்கும் பொருட்டு எழுத்துச் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்று தமிழாசிரியர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
காலத்துக்கு காலம் வேறுபட்ட கல்வெட்டுக்களில் உள்ள தமிழ் எழுத்துக்களும் வரிவடிவங்களில் வேறுபட்டு இருப்பதனையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் சீல் வைக்கப்பட்ட 3 உணவகங்கள்
யாழ் போதனாவில் உள்ள நினைவூட்டி
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உள்ள ஒரு கட்டிடத்தொகுதியின் அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழா குறிப்பில் 1974 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் தமிழ் எழுத்துக்களில் சில தங்களின் தற்போதைய வடிவங்களில் இருந்து வேறுபட்டிருப்பதனை அவதானிக்கலாம்.
1974 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கட்டட நிர்மானிப்புக்களை 1977 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டதாக அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அவதானிப்பைப் பெற்ற கட்டடம் தற்போது வெளிநோயாளர் பிரிவாக இருக்கின்றது.
திருகோணமலையில் பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகள்
அடிக்கல் நாட்டப்பட்ட செய்தி
கட்டடத்தினை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதான செய்திக் குறிப்பிலும் எடுத்துச் சீர்திருத்தத்திற்கு முன்னரான எழுத்துக்கள் இருக்கின்றன.
“இலங்கைக் குடியரசின் பிரதம மந்திரி சிறிமாவோ ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கத்தில் உள்ள சுகாதார அமைச்சர் டபிள்யு. பி. ஜீ.ஆரியதாச அவர்களினால் 1974 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 12 ஆந் திகதி இந்த அடிக்கல் நாட்டப் பெற்றது.”
சீ.எக்ஸ் மாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணம்” என அந்த கட்டடத்தின் அடிக்கல் நாட்டல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதனை அவதானிக்கலாம்.
எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்
திறப்புவிழா செய்தி
எப்போது திறப்புவிழா செய்யப்பட்டது என்ற செய்திக் குறிப்பும் அதில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
“யாழ்ப்பாணத் தொகுதிப் நாடாளுமன்ற உறுப்பினர் சி.எக்ஸ்.மாட்டின் அவர்களின் அழைப்பின் பேரில் சாகாதார அமைச்சர் சிவா ஒபயசேகரா ளுமன்ற உறுப்பினர் அவர்களால் 1977 பெப்ரவரி 14 ந் திகதி இந்தக் கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.”
என பொறிக்கப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம்.
தற்போது நாம் பயன்படுத்தும் “றோ” என்ற எழுத்தின் பழைய வடிவம் “ஒக்றோபர்” என்ற சொல்லில் இருப்பதனை அவதானிக்கலாம்.
“னா”, என்ற தற்போதைய வழக்கில் உள்ள எழுத்து “அவர்களினால்” என்ற சொல்லிலும் இடம்பெற்றிருப்பதனை அவதானிக்கலாம்.
தமிழில் எழுதும் போது ஆங்கிலச் சொற்களையும் கலந்து எழுதும் பழக்கம் அன்றிருக்க வில்லை என்பதற்கு இந்த நினைவூட்டியும் ஒரு சான்று என்று தமிழாசிரியர் குறிப்பிடுகின்றார்.
சி.எக்ஸ். மாட்டின் என எழுதப்படுவதனை தற்காலத்தில் அதிகமானோர் ”C.X மாட்டின்” என எழுதுவதும் நோக்கத்தக்கது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |