கிளிநொச்சியில்(Kilinochchi) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை
முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டமானது இன்று (30.04.2024) காலை 10.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்
சங்க காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காணாமல் போன தமது பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உக்ரைனின் பாரம்பரிய மாளிகை மீது ரஷ்யா திடீர் தாக்குதல்
சர்வதேசத்திடம் கோரிக்கை
குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
“தமது உறவுகள் தங்களுடன் கொஞ்ச காலம் என்றாலும் வாழ வேண்டும் என்று தொடர்ச்சியாக தாம் போராடி
வருகின்றோம்.
தமது போராட்டத்தை இதுவரையில் அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத
நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்கின்றோம்.
குறித்த போராட்டம் ஆயிரக்கணக்கான பேருடன் ஆரம்பிக்கப்பட்ட போதும்
தற்பொழுது நலிவடைந்து போய் பல தாய்மாறின் உயிர்கள் பறிபோனது மட்டுமே மிகுதி” என தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தால் நடக்கப்போகும் கட்சித் தாவல் தொடர்பில் வெளியான தகவல்
கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |