அஸ்வெசும கொடுப்பனவிற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில், போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் பயனாளிகளை கண்டறிய விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான சுற்றுநிருபம் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் படுகொலை
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு
போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெற்றுக் கொள்வது உறுதி செய்யப்பட்டால், அவ்வாறான தரப்பினருக்கான கொடுப்பனவு இடைநிறுத்தப்படும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
ஆகவே அஸ்வெசும கொடுப்பனவிற்கு பொருத்தமான சரியான தகவல்களை மாத்திரம் பதிவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |