2025ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவிருந்த வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் சர்வதேச வருடாந்த மாநாட்டை நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள வீதி விளக்குகளுக்கு அருகில் யாசகர்கள் அச்சுறுத்தலாக உள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் தேவப்பிரிய ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழில் வெளிநாட்டவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து: ஒருவர் பலி
வாகன உற்பத்தியாளர்கள்
2015 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் மாநாடு தொடர்பான ஆசிய பசுபிக் பிராந்திய கூட்டத்தை இலங்கை நடத்தியதாக அவர் கூறினார்.
இதில் சுமார் 150 பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ருவாண்டாவில் நடைபெற்ற பொதுச் சபையில் 2025ஆம் ஆண்டு இலங்கையில் மாநாட்டை நடத்துவதற்கான முயற்சி சமர்ப்பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், கொழும்பு மாநகர எல்லையில் உள்ள போக்குவரத்து விளக்குகளுக்கு அருகில் யாசகர்களின் அச்சுறுத்தல் காணப்படுவதால், இலங்கையில் மாநாட்டை நடத்த முடியாது என தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு இலகுவாக செல்ல வாய்ப்பு : இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
நற்பெயருக்கு களங்கம்
மாநகர எல்லைக்குள் யாசகத்தில் ஈடுபடுவது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் என்றும் கூறியுள்ளனர்.
அதன் காரணமாக 2025 ஆம் ஆண்டு இலங்கை வாகனத் தொழில்துறையின் கூட்டத்தை நடத்த உத்தேசித்தால், இந்த நிலைமையைத் தீர்ப்பதற்கு கொழும்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்ததாக தேவப்பிரிய ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
மேலும், ருவாண்டாவில் நடைபெற்ற பிராந்திய கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் கொழும்பு நகர எல்லையில் உள்ள போக்குவரத்து விளக்குகளுக்கு அருகில் யாசகம் எடுப்பதை பார்த்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
கொழும்பில் பல்வேறு இடங்களுக்கு பயணித்த தமக்கு இது ஒரு விரும்பத்தகாத அனுபவமாக இருந்ததாகவும் இதனால் கணிசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.