நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் சேவைகளை முன்னெடுக்க வாகன வசதிகள் வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன (Eran Wickramaratne) தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வசதி வழங்கப்படுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொதுச்சேவை வினைத்திறனாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணிலின் நகர்வுகளால் கலக்கத்தில் இந்தியா
வாகன உரிமம் அல்லது வாகனம்
சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்பது வருடங்களாக வாகன உரிமம் அல்லது வாகனம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு வந்த அமைச்சர்களுக்கு கூட வாகனம் இல்லாதது பெரும் சிரமமாக மாறியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வரலாற்றில் அதிக தவறுகளை இழைத்தவர்கள்: பதிலுக்காக காத்திருக்குமாறு மகிந்த அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |