யாழில் (Jaffna) புன்னாலைக்கட்டுவன் (Punnalaikkattuvan) வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறீவரதன் சஞ்சிதன் என்ற 22 வயதுடைய இளைஞனே இன்று அதிகாலை 12.30 மணியளவில், சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் அவரது காதலியின் வீட்டுக்குச் சென்று அங்கு உறங்கியதாகவும் அதனையடுத்து 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது, இந்த மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக இளைஞனின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து உடற்கூற்று பரிசோதனைகள் நாளைய தினமே நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
https://www.youtube.com/embed/isKvOefA9hU