அடுத்த தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ இதுவரை எட்டப்பட்ட அரசாங்க வருமான அதிகரிப்பு உட்பட பொது நிதித்துறையின் முன்னேற்றத்தை மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைத்து பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்று மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
இது 2022 இல் ஏற்பட்ட சமூக பொருளாதார அரசியல் நெருக்கடியை விட மோசமான நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையின் இரு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள மோடி
அரசாங்கத்தின் முயற்சி
இதன் காரணமாக, நீண்டகாலமாகத் தேவையான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பொது நிதிகளை சிறப்பாக நிர்வகிக்க அரசாங்கம் தனது முயற்சிகளை தொடரும் என்று மத்திய வங்கி எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள முதலாவது வருடாந்த பொருளாதார வர்ணனை அறிக்கையில் இது காட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் ஆபத்தில் வீழ்ந்துள்ள இலங்கையின் ஊடக சுதந்திரம்: வெளியானது பட்டியல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |