முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கடந்த மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (Sri Lanka Export Development Board) தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானமாக 33,710 கோடி ரூபாவை (1,138.9 அமெரிக்க டொலர்கள்) பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையானது,கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானத்தோடு ஒப்பிடுகையில், நூற்றுக்கு 9.77 வீத அதிகரிப்பைக் காட்டுவதாக தரவுகள் கூறுகின்றன.

அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி: அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி: அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

ஏற்றுமதி வருமானம்

மேலும், இந்த வருடத்தின் மார்ச் மாதத்தின் ஏற்றுமதி செயற்பாடுகள் பெப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில், நூற்றுக்கு 7.51 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது.

economy of sri lanka

இதேவேளை, இவ்வருடத்தின் மார்ச் மாதத்துக்கான சேவை ஏற்றுமதியின் பெறுமதி 275.1 மில்லியன் அமெரிக்க டொலரென்றும், கடந்த வருடத்தின் இக்காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், அது நூற்றுக்கு 8.39 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களை பொறுத்தவரை ஆடைகள், தேயிலை, இறப்பர் மற்றும் இறப்பர் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் தேங்காய், தெங்கு சார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கான கேள்விகள் குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டுள்ளன.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

உற்பத்திப் பொருட்கள் 

எனினும், கடந்த பெப்ரவரி மாதத்தில் ஆடைகள், தேயிலை, இறப்பர், தேங்காய் மற்றும் தெங்கு உற்பத்திப் பொருட்கள் மாணிக்கக்கற்கள் இலத்திரனியல், வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்பட்ட உணவுகள், கடலுணவு, வளர்ப்பு மீன்கள், மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்கள் மூலமான ஏற்றுமதி வருமானமே அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Export Earnings Of Sri Lanka 2024 March Dollar Rs

இலங்கையை பொறுத்தவரையில், வர்த்தக உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதியில் ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், துருக்கி மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் முக்கியமான பங்காற்றுகின்றன.

அந்த வகையில் இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் அதிக ஏற்றுமதி வருமானம் ஐக்கிய இராஜ்ஜியம் தவிர ஐரோப்பிய நாடுகள் மூலமே கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை 

அவ்வாறு கிடைக்கப்பட்ட ஏற்றுமதி வருமானம் 248,48 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

கடந்த வருடத்தின் மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில், இந்த வருமானமானது, 4.79 வீத அதிகரிப்பு என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Export Earnings Of Sri Lanka 2024 March Dollar Rs

இதற்கு மேலதிகமாக அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் 241. 5 மில்லியன் டொலர்களும், தெற்காசிய நாடுகளுக்கான ஏற்றுமதி வருமானமாக 103.52 மில்லியன் டொலர்களும் கிடைத்துள்ளதாகவும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.