எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமது கட்சியின் ஆதரவை தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க கோரவில்லை என பொதுஜன பெரமுனவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa)தெரிவித்துள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் அதிபர் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை சிறி லங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கும்.என்றார்.
இதன்போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு மகிந்த ராஜபக்ச அளித்த பதில் வருமாறு,
கனடாவில் கைதான தமிழர்கள் தொடர்பில் வெளியான தகவல்
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) இன்னும் சிலகாலம் காலம் காத்திருக்க வேண்டும்.
“மொட்டுவில் இளம் தலைமைத்துவத்தை முன்வைக்கும் நம்பிக்கை உள்ளதா
வெற்றி பெறக்கூடிய வேட்பாளரை
“இளைஞராகவோ, நடுத்தர வயதினராகவோ அல்லது வெற்றி பெறக்கூடியவராகவோ இருக்கக்கூடிய ஒரு வேட்பாளரை நாங்கள் முன்நிறுத்துவோம்.”
நாமல் ராஜபக்ச அதிபர் வேட்புமனுவை வழங்குவதற்கு தகுதியானவரா நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா
கட்சி முடிவு செய்யும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
இலங்கையின் இரு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள மோடி
நாமல் ராஜபக்ச பொருத்தமானவரா
அவர் பொருத்தமானவரா
“அவர் சிறிது காலம் காத்திருக்க இருக்க வேண்டும்.”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |