முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திரா காந்தி படுகொலையை ஆதரிக்கும் சிலைகள்: இந்திய-கனடா உறவில் விரிசல்

முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி(Indra Gandhi)படுகொலையை ஆதரிக்கும் வகையில், கனடாவில்(Canada) வைக்கப்பட்டுள்ள அலங்கார சிலைகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மேலும், அந்நாட்டின் நடவடிக்கைகளால், உறவு பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பிராம்ப்டன் நகரில்ப்ளூ ஸ்டார் ஆபரேசன் 40வது ஆண்டு தினத்தை முன்னிட்டு , முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை சித்தரித்து அலங்கார சிலைகள் வைக்கப்பட்டன.

கனடாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டி: பெரும் அச்சத்தில் புலம்பெயர் இந்தியர்கள்

கனடாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டி: பெரும் அச்சத்தில் புலம்பெயர் இந்தியர்கள்

இந்திரா காந்தி சிலை

மேலும், இந்திரா காந்தி சிலை பின்புறம் சுவரொட்டியொன்றும் ஒட்டப்பட்டு இருந்தது.

அதில், 1984 ஒக்.,31 ல் நடந்ததற்கு வழங்கப்பட்ட தண்டனை என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்திரா காந்தி படுகொலையை ஆதரிக்கும் சிலைகள்: இந்திய-கனடா உறவில் விரிசல் | Statue Indira Assassination India Condemns Canada

அந்த சுவரொட்டியில், கொலை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் புகைப்படமும் உள்ளது.

மேலும், அந்த சுவரொட்டியில் பிரதமர் மோடி புகைப்படத்துடன், தண்டனை காத்திருக்கிறது என்ற வாசகம் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் வான்கூவர் நகரில் இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தின் போதும், இதே போன்று சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது.

கேள்விக்குறியாக மாறிய கனேடிய பிரதமரின் அரசியல் வாழ்வு

கேள்விக்குறியாக மாறிய கனேடிய பிரதமரின் அரசியல் வாழ்வு

இந்தியா கண்டனம்

இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக கனடா அரசிடம் தூதரக ரீதியில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திரா காந்தி படுகொலையை ஆதரிக்கும் சிலைகள்: இந்திய-கனடா உறவில் விரிசல் | Statue Indira Assassination India Condemns Canada

இது தொடர்பாக அந்நாட்டிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறியதாவது: வன்முறை மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பொது வெளியில் போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது கனடா அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனடாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள் இத்தகைய வெறுப்பு பிரசாரத்தினால், அச்சுறுத்தப்படுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக கனடாவில் இந்த நிகழ்வு மீண்டும், மீண்டும் நடக்கிறது.

உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 90 உலக நாடுகளின் தலைவர்கள்

உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 90 உலக நாடுகளின் தலைவர்கள்

இந்தியா – கனடா உறவு

இதனை தடுக்க கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கனடாவிற்கு கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:

பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும், வன்முறையை ஆதரிப்பவர்களுக்கும் , இங்கு கொடுக்கப்படும் ஆதரவு பற்றி பெரிய பிரச்சினை உள்ளதாக கருதுகிறேன்.

இந்திரா காந்தி படுகொலையை ஆதரிக்கும் சிலைகள்: இந்திய-கனடா உறவில் விரிசல் | Statue Indira Assassination India Condemns Canada

இது இந்தியா – கனடா உறவுக்கு நல்லது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவிற்கான கனடாவின் தூதர் கேமரூன் மெக்கே கூறுகையில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலையை ஆதரித்து நடந்த நிகழ்ச்சி அதிர்ச்சி அளிக்கிறது.

பிரிவினைக்கும், வன்முறையை புகழ்வதற்கும் கனடாவில் இடம் இல்லை. இந்த நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.