இலங்கையின் (Sri Lanka) வடக்கு கிழக்கில் போர் நிறைவடைந்த பின்னர் தொடரும் அடக்குமுறைகளுக்கு தீர்வு காணும் வகையில் வட்ட மேசை கலந்துரையாடலை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய (Karu Jayasuriya) வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, கரு ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக வட மாகாணத்துக்கான பயணத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் உறுதியளித்தார்.
சஜித்தின் வாக்குறுதி
இந்த நிலையில், சஜித் பிரேமதாசவின் வாக்குறுதியை தமிழ் அரசியல் கட்சிகளும் அரசாங்கமும் பயன்படுதிக்கொள்ள வேண்டுமென கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை நிராகரிக்கும் ஜே.வி.பி! உறுதிப்படுத்திய அனுரகுமார
முன்னாள் அதிபர்களான சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrika Bandaranayake) மற்றும் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapakse) ஆகியோரும் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremasinga) 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்திருந்ததாக அவர் நினைவூட்டியுள்ளார்.
இந்த பின்னணியில், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான எதிர்க்கட்சி தலைவரின் கருத்தை நடைமுறைப்படுத்த ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை தவற விடும் பட்சத்தில் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என கரு ஜயசூரிய எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய நாடாளுமன்றத்தை அமைக்க திட்டம்: பகிரங்கமாக அறிவித்த திலித் ஜயவீர
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |