நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதி நெருங்கி வரும் நிலையில் தற்போது பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு பிரதான கட்சிகளிடம் இருந்து வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறும் எனவும், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அனைத்து முக்கிய வேட்பாளர்களும் அறிவித்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபயவின் கதியே சஜித்திற்கு ஏற்பட்டிருக்கும் : ரணிலின் ஆலோசகர் புது தகவல்
அடுத்த தேர்தலில் மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு
அதன்படி, பொதுத் தேர்தலை நடத்த இன்னும் 114 நாட்களே உள்ளன.
இந்நிலையில் தற்போது சுயேட்சையாக செயற்பட்டு பல்வேறு குழுக்களில் இணைந்துள்ள பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பெரமுனவுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சித் தலைவரின் யாழ் விஜயம்! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சு
இவர்களில் பெருமளவானோர் மொட்டுவில் போட்டியிட்டு இவ்வருடம் நாடாளுமன்றத்திற்கு வந்தவர்களாவர்.
அதன் பெரும் எண்ணிக்கையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி, மொட்டு ஆகிய கட்சிகளுக்கிடையே அதிக ஆசனங்கள் பிரிக்கப்படும் என தற்போதைய கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ள நிலையில், இந்தக் கட்சிகளுடன் எம்.பி.க்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |