முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சம்பள முரண்பாடு தீர்க்கப்படாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும்

அரசாங்கத்திற்கு 14 நாட்கள் கால அவகாசத்தை வழங்கி இருக்கின்றோம் ஜனாதிபதி
ரணில் உடனடியாக எமது பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும்
26ஆம் திகதி இலங்கையில் உள்ள அநேகமான அதிபர் ஆசிரியர்களை கொழும்புக்கு (Colombo) வரவழைத்து நாங்கள் பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை ஆசிரியர் சேவை
சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) ஊடக அமையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சம்பள உயர்வு

மேலும் தெரிவிக்கையில், “நேற்று முன்தினம் (12) இலங்கை வரலாற்றிலே 101 கல்வி வலயங்களிலும் மிகவும் வெற்றிகரமாக
அதிபர் ஆசிரியர்களின் சம்பள போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு மிக வெற்றிகரமாக
ஏற்படுத்தப்பட்டது.

massive-strik-if-pay-dispute-is-not-resolved

கடந்த 27 வருடங்களாக அதிபர் ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல்
இருந்தது நாங்கள் 2001ஆம் ஆண்டு பாரிய போராட்டத்தின் மூலமாக மூன்றில் ஒரு
பகுதி சம்பளத்தை 2022ஆம் ஆண்டு பெற்றோம்

அதற்குப் பின்பு 2023 2024 வரவு
செலவுத் திட்டத்தில் ஆசிரியர் அதிபர்களுடைய சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான
நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சும் அதுபோல நிதி அமைச்சும் பல
பொய்களை கூறியபோதும் எவ்வித நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை.

நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம் அதிபர்
ஆசிரியர்களுடைய சம்பள உயர்வை இந்த அரசாங்கம் வழங்கும் என்று ஆனால் இறுதியில்
ஏமாற்றமே கிடைத்தது.

கூலிப்படைகள்

பல போராட்டங்களை 2023 ஆம் ஆண்டு செய்திருந்தோம். அந்த ஜனநாயக நியாயமான
போராட்டம் மீது ரணில் ராஜபக்ச அரசாங்கம் தடியடி கொண்டும் தண்ணீர் தாக்குதலும்
ஆசிரியர் அதிபர்கள் மீது மேற்கொண்டார்கள்.

எனவே உடனடியாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க கூறி நாங்கள் கேட்கின்றோம்
இந்த நாட்டில் ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதி இன்று இல்லை நாங்கள்
போராடுவது வெறுமனே அதிபர் ஆசிரியர்களது சம்பள உயர்வுக்காக மாத்திரமல்ல இலவச
கல்வியை பாதுகாப்பதற்காகவும் தான் நாங்கள் போராடுகின்றோம்.

massive-strik-if-pay-dispute-is-not-resolved

எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களில் நாட்டில் உள்ள
பெற்றோர்கள் பொதுமக்கள் இணைந்து கொண்டு இந்த போராட்டத்தை நடத்துவார்கள்.

ஆனால்
நேற்று முன்தினம் வெற்றி அளித்த இந்த போராட்டத்தை ஒரு சிலர் அரசாங்கத்திற்கு பின் நின்று
கூலிப்படைகளாக செயல்படுகின்ற சிலர் அதிபர் ஆசிரியர்களை வேறு கோணத்தில் அல்லது
வேறு பாதையில் திசை திருப்புகின்றார்கள்.

எனவே அதிபர் ஆசிரியர்களை இந்த கூலிப்படைகளை கண்டு நீங்கள் தெளிவாக இருக்க
வேண்டும்” என்றும்  ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.