ரஷ்ய இராணுவத்தில் சிக்கியுள்ள இலங்கையர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினர் ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதியில் இந்த குழுவினர் ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள்
மேலும், மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பிலும் இந்த நாட்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்ய இராணுவத்தில் இனி இலங்கையர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செரன் லாவ்ரோவ் அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.