இராணுவத்தினரின் உதவியுடன் யாழ்ப்பாணம் (Jaffna) – அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சி தலைவர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (18) உரையாற்றும் போதே, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அண்மை நாட்களாக தொடரும் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களின் பின்னணியில் பாதுகாப்பு படையினர் இரகசியமாக செயல்பட்டு வருகின்றனரா என சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் (Sri Lanka) அதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில், அவர்களின் ஆதரவின்றி நள்ளிரவு வேளை வன்முறை கும்பலால் நடமாட முடியாதென சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவற்றை, கீழுள்ள காணொளியில் காணலாம்…
https://www.youtube.com/embed/67J3J2nNFdI