பொலன்னறுவை (Polonnaruwa) மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் காட்டு யானைகளால் தமது விவசாயப் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
இக்கிராவை பகுதியை சேர்ந்த சுமார் 400 விவசாயிகள் இவ்வருடம் ஏறக்குறைய ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் குறித்த நிலப்பரப்பில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
உடனடி தீர்வு
இந்த காட்டு யானைக் கூட்டம் வஸ்கமுவ வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்கு வந்து வெஹெர கந்த மற்றும் பொக்குனுகல சாதுப்பு நில காடுகளில் தங்கியுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வலஸ்முல்ல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அந்த பிரதேசத்தின் நெற்செய்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அரசாங்கம் காட்டு யானை பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுதறுமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

